Home அறிவியல் தைராய்டு டயட்டின் 5 முக்கிய உணவுகள்! ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் எனர்ஜி பூஸ்டர் (thyroid...

தைராய்டு டயட்டின் 5 முக்கிய உணவுகள்! ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் எனர்ஜி பூஸ்டர் (thyroid health – energy booster)

363
0
Share

தைராய்டு என்பது இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் தாக்கும் ஒரு நோயாக மாறிவிட்டது. கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினையே தைராய்டு எனப்படுகிறது.தைராய்டு ஆரோக்கியத்தை பாதுகாக்க மற்றும் தைராய்டு செயல்பாட்டை அதிகரிக்க உதவும் உணவுகளை தினமும் தவறாமல் உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது அவசியமாகிறது.

தைராய்டு என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. மேலும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு தைராய்டு இன்றியமையாத ஒரு ஹார்மோனாக இருக்கிறது. நமது முழு நல்வாழ்விற்கும் பொறுப்பாகும் என்பதால் தைராய்டு ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. மோசமான ஊட்டச்சத்து மற்றும் மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை குறைபாடுகள் காரணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் என பாலின வேறுபாடு இன்றி வயதைப் பொருட்படுத்தாமல் தைராய்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தைராய்டு ஆரோக்கியத்தை பாதுகாக்க மற்றும் தைராய்டு செயல்பாட்டை அதிகரிக்க உதவும் உணவுகளை தினமும் தவறாமல் உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது அவசியமாகிறது.

நல்ல தைராய்டு அளவை பராமரிக்க கீழ்காணும் சூப்பர் எனர்ஜி பூஸ்டர் உதவுகின்றன.

amla for thyroid diet
thyroid diet

நெல்லிக்காய் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோயை எதிர்த்துப் போராடவும் உதவும் சத்துக்கள் நெல்லியில் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி-யை விட 8 மடங்கு வைட்டமின் சி மற்றும் மாதுளையில் இருக்கும் வைட்டமின் சி-யை விட 17 மடங்கு நெல்லியில் உள்ளது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தவிர நெல்லிக்காய் தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள்.

thyroid food to eat
control thyroid imbalance

தேங்காய் : தேங்காயை பச்சையாக அல்லது சமையலில் சேர்த்து சாப்பிடுவது தைராய்டு நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவாகும். இது மெதுவான அல்லது மந்தமான வளர்சிதை மாற்றம் கொண்டவர்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தேங்காயில் MCFA-கள் (medium chain fatty acids) மற்றும் MTCகள் (medium chain triglycerides) அதிகமாக உள்ளது. இவை இரண்டுமே வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

best food for thyroid problemபூசணி விதைகள்: பூசணி விதைகளில் துத்தநாக (zinc) சத்துஅதிகமாக உள்ளது. இது உடல் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கும், தைராய்டு ஹார்மோன்களின் உருவாக்கம் மற்றும் சமநிலைக்கும் அவசியம் ஆகும்.

bean sprouts helps thyroid imbalance
Best Food For thyroid patient

பாசிப்பயிறு : புரோட்டீன், ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பாசிப்பயிறில் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான பக்க விளைவுகளான மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு நன்மை பயக்கும்.

healthy foods for a thyroid diet
healthy foods for a thyroid diet

பூண்டு : செலினியம் அதிகம் இருக்கும் உணவு பொருட்களில் பூண்டு முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு மட்டுமின்றி பூண்டு தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிக சிறந்த உணவு.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here