Home அறிவியல் உலகின் மிகப்பெரிய அணுக்கரு இணைவு ! வியாபார நோக்கமா ?

உலகின் மிகப்பெரிய அணுக்கரு இணைவு ! வியாபார நோக்கமா ?

378
0
Share

மேற்கு பிரான்ஸ் பகுதியில் உலக அளவில் மிகப்பெரிய அணுக்கரு இனைவு முயற்சி நடைபெற்று வருகிறது. சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகிலேயே மிகப்பெரிய அணுக்கரு இணைவு பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதற்கான ஆயத்தப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த அணுக்கரு இணைவு பரிசோதனை வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த அணுக்கரு இணைவு சூரியனைப் போன்று மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாது பூமிக்குத் தேவையான பெருமளவு சக்தியை இந்த அனுக்கருஇணைவு மூலம் கிடைக்கப் பெற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சிக்கு International Thermonuclear Experimental Reactor (ITER ) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த முயற்சி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவு பெறும் என்றும் அதன் பிறகே வியாபார ரீதியாகக் கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். வியாபா ரீதியாக இடம் பெறும் போது பல்வேறு நாடுகளில் இதனை வாங்கி தன் நாட்டிற்காகச் செயல்படுத்தப்படும் முன் வருவர் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here