Home முகப்பு உலக செய்திகள் செவ்வாய் கிரக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பாய்ந்தது விண்கலம்!…

செவ்வாய் கிரக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பாய்ந்தது விண்கலம்!…

463
0
Missile America
Share

செவ்வாய் கிரகத்தில், ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வின் விண்கலம், நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில், மனிதர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆராய, ‘பெர்செவரன்ஸ்’ என்று பெயரிடப்பட்ட, ‘ரோவர்’ வாகனத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நேற்று விண்ணில் செலுத்தியது. ‘அட்லஸ்-5’ ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த பெர்செவரன்ஸ் ரோவர், ஒரு காரின் அளவுக்கு பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு மாத பயணத்துக்கு பின், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும். ‘அங்கு, குழிகள் தோண்டி, கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை சேமிக்கும்.

இந்த மாதிரிகள், 2031ல், பூமிக்கு கொண்டு வரப்படும்’ என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த, மாபெரும் ஆய்வுக்காக, 60 ஆயிரம் கோடி ரூபாயை, அமெரிக்கா செலவிட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here