Home செய்திகள் இந்தியா சரசரவென ஏறிய தங்கத்தின் விலை விறுவிறுவென 1464 ருபாய் இறங்கியது. இன்றைய விலை என்ன தெரியுமா...

சரசரவென ஏறிய தங்கத்தின் விலை விறுவிறுவென 1464 ருபாய் இறங்கியது. இன்றைய விலை என்ன தெரியுமா ?

411
0
Share

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1464 குறைந்தது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமிற்க்கு ரூபாய் 183 குறைந்து ஒரு கிராம் 4680 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை 38,904 விற்பனையான நிலையில், இன்று 1464 விலை குறைந்து 37,440-க்கு விற்பனையாகிறது.

இதே போல் ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை 65.80 விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 0.40விலை குறைந்து 65.40 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நிலையான நிலையில் இல்லாமல் இருந்த நிலையில் இன்று அதிரடியாக விலை இவ்வளவு ரூபாய் குறைந்திருப்பது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கூறியிருப்பதாவது :
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் அனைத்து முதலீடுகளையும் தங்கத்தின் மீது செலுத்தியதால் தங்கம் விலை சவரனுக்கு 45000 வரை உயர்ந்தது. தற்போது பெரும்பாலான தொழில்கள் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை தங்கத்தின் மீது இருந்து பல நிறுவனங்களின் மேல் செலுத்த துவங்கியுள்ளனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு குறைய துவங்கியது. எனவே சில்லறை விலையிலும் தங்கத்தின் மதிப்பு இவ்வளவு ரூபாய் குறைந்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here