Home செய்திகள் இந்தியா முன்னாள் விமானப்படை விமானி ஓட்டி வந்த விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாகப் பிளந்தது… 16 பேர் உயிரிழப்பு

முன்னாள் விமானப்படை விமானி ஓட்டி வந்த விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாகப் பிளந்தது… 16 பேர் உயிரிழப்பு

313
0
Share

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து இந்திய மக்களை மீட்டு வரும் மத்திய அரசு, இத்திட்டத்தின் கீழ் UAE நாட்டின் துபாயிலிருந்து கேரளா கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானி,கைக்குழந்தை உட்பட 16 பேர் பலியாகினர்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விமானச் சேவையும் இந்த மாதம் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் வந்தே பாரத் திட்டத்தை இயக்கியது. இந்த திட்டத்தின் கீழ் கேரளாவில் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம் நேற்று இரவு இறந்த இருந்தது. இந்த விமானம் இந்தியா துபாயிலிருந்து 174 பயணிகள் முதல் 191 பேர் இந்த விமானத்திலிருந்தனர்.

இந்த விமானத்தை முன்னாள் விமானப் படை சோதனை விமானி தீபக் வசந்த் சாதே இயக்கி வந்தார். கோழிக்கோட்டில் தரையிறங்கத் தயாராக இருந்த விமானம் அங்குப் பெய்த கடும் மழை காரணமாக ஓடுபாதையை விட்டு அருகிலிருந்த 35 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானி, கைக்குழந்தை உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர் இந்த பாதிப்பிற்குள்ளான பயணிகளை விமான ஊழியர்களையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி இடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். இந்த விஷயம் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதே போல் கேரள முதல்வர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசுக்கு மீட்புப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.

இந்த விமான ஓடுதளம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது இரண்டு பள்ளத்திற்கு நடுவே டேபிள் டாப் எனும் ஓடுபாதை அமைந்துள்ளது. திறமை வாய்ந்த விமானிகள் மட்டுமே இங்குக் கச்சிதமாகத் தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here