Home செய்திகள் இந்தியா தமிழ் நாட்டில் கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது!.. தற்போது 23 ஆக உயர்ந்துள்ளது…

தமிழ் நாட்டில் கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது!.. தற்போது 23 ஆக உயர்ந்துள்ளது…

239
0
Tamil Nadu in Corona Checkup
Share

உலகை அச்சுறுத்தி வரும் கொரோன தற்போது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இந்தியாவில் 569 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பல்வேறு நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை 18 ஆயிரத்து 810 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர் வாசிகளையும் சேர்த்து 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் இது தமிழின மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் துறந்த நபர் கொரோனா வைரஸால்  (கோவிட் – 19) பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர்துறந்தார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

UPDATES ON LIVE

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் அதிகாரப் பூர்வகமா தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் உணவகங்களான ஹோம் டெலிவரி செய்யும் ஸ்விகி, ஜோமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி தடை செய்துள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு அனைத்து டீ கடைகளை மூட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக மக்கள் அனைவரும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் வீட்டில் இருந்து வெளியில் வராமல் இருக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் சுற்றித் திரிந்த ஜப்பான் நாட்டவரை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர் மார்ச் 1ஆம் தேதி திருவண்ணாமலைக்கு செல்ல வந்தவர் திரும்பிச் செல்லமுடியாத காரணத்தினால் எங்கு தங்குவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக மற்றொரு கொரோனா சோதனை மையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஏழு சோதனை மையங்கள் செயல்படும் நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் சோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சோதனை மையங்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் வரும் பல மாதிரிகளை இங்கு சோதனை செய்து கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

Vijaya Baskar
சாலைகளில் செல்பவர்களை நிறுத்தி வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று காவல் துறையினர்கூறியுள்ளார். சில இடங்களில் எச்சரிக்கைச் செய்து அவர்களை அனுப்பு வைத்தனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது இதனால் நேற்றைய முன்தினம் அனைத்து மது கடைகளில் உள்ள மது பாட்டில் விற்று தீர்த்தன.

21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளார், டிஜிபி, அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தலைமை செழலகத்தில்.

அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் குணமடைந்து அவர்கள் வீடு திரும்பினார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாததால் திருமங்கலத்தில் சேர்ந்த ஒருவர் மீதும், கோயம்பேட்டில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை அரசாங்கம் தனிமைப் படுத்தி வைத்துள்ளது.

அத்தியாவசியம் மற்றும் அவசர பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிக்குச் சென்று திரும்ப வசதியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் உடனே இந்த நம்பரை அழைக்க முன்னெச்சரிக்கை பிறப்பித்துள்ளது, 044-29510400, 044-2951500, 9444340496, 8754448477 என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பல பாலங்கள் மூடல்; முக்கியமான பாலங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன பீச், தியேட்டர், மால்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டு செல்ல முடியாத அளவுக்கு வழி வகை செய்துள்ளது தமிழக அரசாங்கம்.

தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்!

வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் கோயம்பேடு சந்தை இயங்காது. இன்றும், நாளையும் வழக்கம்போல் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here