Home செய்திகள் இந்தியா தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட “வொண்டர் வுமன் 1984” திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியீடு !

தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட “வொண்டர் வுமன் 1984” திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியீடு !

456
0
Share

உலக அளவில் புகழ்பெற்ற டிசி காமிக்ஸ் தயாரிப்பில் வொண்டர் வுமன் 1984 திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் திரையரங்குகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஒரு சில நாடுகளில் மட்டும் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 5 மாதங்களாக மிகப் பெரிய படங்கள் எதுவும் வெளியிடப்படாமல் முடங்கி ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் திறக்க தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகி கொரோனாவிற்கு முன்பே வெளியாக இருந்த “டெனெட்” திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதே போல் அடுத்தடுத்து கிடப்பில் உள்ள படங்களைத் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் முயற்சியில் களம் இறங்கிய உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாகவிருந்த வொண்டர் வுமன் 1984 திரைப்படம் கொரோனா பரவலின் காரணமாக அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 335 கோடி ! ஏன் தெரியுமா ?

இது தொடர்பாக வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் டோபி எம்மரிச் தெரிவித்திருப்பதாவது :
பேட்டி ஜென்கின்ஸ் ஒரு அற்புதமான இயக்குநர் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள வொண்டர் வுமன் 1984 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அனைவரும் விரும்பும் வகையிலும் இயக்கியுள்ளார். இந்த அற்புத படைப்பைக் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here