Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் பருவ மழைக்காலம் தொடங்கியது.. ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் ?

பருவ மழைக்காலம் தொடங்கியது.. ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் ?

587
0
Share

பருவ மழை காலம் தொடங்கியதால் தீவிர காய்ச்சலுடன், சளி, இருமல், தலைவலி போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரை அணுகி கொரோனா பரிசோதனை பெற்றுக்கொள்வது சிறந்தது.

தற்போது மக்கள் ஏற்கெனவே கொரோனா பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மழைக்கால தொற்றுகளும் பரவ தொடங்கிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் கொரோனா அறிகுறிகளும் சாதாரண காய்ச்சல், சளி அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பது தான். எனவே இதை மருத்துவர்கள் கண்டறியவே கடும் சிரமமாகின்றனர்.

எனவே காய்ச்சலுடன், சளி, இருமல், தலைவலி போன்ற அறிகுறிகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் சென்று கொரோனா பரிசோதனை பெற்றுக் கொள்வது நல்லது என அறிவுறுத்தபட்டுள்ளது. எனவே இந்நிலையில் சாதாரண நோய் தொற்றுகளும் தாக்காமல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..?

உணவே மருந்து : நம் உடலுக்குத் தேவையான அனைத்து மருத்துவ குணங்களும் சாப்பிடும் காய்கறி, பழங்களிலேயே இருக்கின்றன. எனவே உங்கள் டயட்டை சற்று ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி, ஸிங்க் மற்றும் ஐயர்ன் ஆகிய சத்துக்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதே போல் விட்டமின் டி யும் இன்றியமையாத ஒன்று, எனவே இவற்றை சரியாக பின்பற்றினாலே உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பயமே வேண்டாம். உணவே மருந்து : நம் உடலுக்குத் தேவையான அனைத்து மருத்துவ குணங்களும் சாப்பிடும் காய்கறி, பழங்களிலேயே இருக்கின்றன. எனவே உங்கள் டயட்டை சற்று ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி, ஸிங்க் மற்றும் ஐயர்ன் ஆகிய சத்துக்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் விட்டமின் டி யும் இன்றியமையாத ஒன்று, எனவே இவற்றை சரியாக பின்பற்றினாலே உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பயமே வேண்டாம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசம் – முதல்வர் அறிவிப்பு

சுகாதாரம் : கைகளை நன்கு கழுவுதல், சுத்தமான ஆடைகளை உடுத்துதல், வெளியே சென்று வந்தால் முதலில் கைக்கால்களை சோப்பு போட்டு கழுவுங்கள். முடிந்தால் குளித்துவிடுவது நல்லது. இந்த சுகாதார விஷயங்களை முறையாகப் பின்பற்றுங்கள். சுகாதாரம் : கைகளை நன்கு கழுவுதல், சுத்தமான ஆடைகளை உடுத்துதல், வெளியே சென்று வந்தால் முதலில் கைக்கால்களை சோப்பு போட்டு கழுவுங்கள். முடிந்தால் குளித்துவிடுவது நல்லது. இந்த சுகாதார விஷயங்களை முறையாகப் பின்பற்றுங்கள்.

உடற்பயிற்சி : கை , கால், உடல் தசைகள் புத்துணர்ச்சியுடன் இருக்க, இரத்த ஓட்டம் சீராகப் பாய உடற்பயிற்சியும் அவசியம். எனவே குறைந்தது அரை மணி நேரம் வீட்டிலேயே கூட உடற்பயிற்சி செய்யலாம்.

தூக்கம் : எந்த வேலையாக இருந்தாலும் தூக்கத்தை மட்டும் சமரசம் செய்யாதீர்கள். உங்கள் உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க இரவுத் தூக்கம் மிக மிக அவசியம். உடல் தன் வேலையை சீராக செய்து முடித்தால்தான் மறுநாள் காலை உற்சாகமாக இருக்க முடியும். இல்லையெனில் விடுபட்ட வேலையினால் சோர்வடைந்துவிடும். எனவே சீக்கிரம் தூங்கி எழுதல் அவசியம்.

தவிர்க்க : கூட்ட நெரிசல் கொண்ட இடங்கள், சுகாதாரமற்ற, தூய்மையற்ற இடங்கள் போன்றவற்றைத் தவிருங்கள். வெளியே செல்வதானால் மாஸ்க் கட்டாயம் அணிந்து செல்லுங்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here