Home செய்திகள் இந்தியா PUBG விளையாட்டிற்காக 16 லட்சம் செலவு செய்த சிறுவன்.. அதிர்ச்சியில் பெற்றோர்கள் !

PUBG விளையாட்டிற்காக 16 லட்சம் செலவு செய்த சிறுவன்.. அதிர்ச்சியில் பெற்றோர்கள் !

383
0
pubg
Share

இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் கேம் மோகம் ஏராளமாக வளர்ந்து வருகின்றது. அதிலும் ஸ்மார்ட்போன்களில் ஒரு சில கேம்கள் தான் மிக முக்கியமாக ப்ரபலமடைகிறது. அதில் ஒன்று தான் PUBG இந்த கேம் பெயரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாக உள்ளனர்.

இந்த கேம் ஆனது துப்பாக்கி சுடுதல் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. எனவே ஏராளமான இளைஞர்கள் இந்த விளையாட்டில் மூழ்கியுள்ளனர். தற்போது பஞ்சாபைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவர்களது பெற்றோர் கணக்கிலிருந்து 15 லட்சம் ரூபாயை இந்த விளையாட்டிற்காக செலவு செய்துள்ளான். இந்த விளையாட்டில் புரோ வெர்ஷன் என்ற ஒரு பகுதி உள்ளது. அது மட்டுமல்லாமல் அப்கிரேடு என்று ஒரு வழி உள்ளது.

அதை செய்வதற்கு கேம் தரப்பிலிருந்து பணம் கேட்கின்றனர். இதனை அவன் விளையாடுவதற்கும் உடன் விளையாடும் நண்பர்களுக்கும் பணம் கொடுத்து அப்டேட் செய்துள்ளான். இது பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்க வங்கி கணக்கில் இருந்து வரும் குறுஞ்செய்தியினை அழித்துள்ளான். அந்த சிறுவனுடைய தந்தை ஓர் அரசு அதிகாரி இவர் இது குறித்து சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வருத்தம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்ததும் உருக்குலைந்து போன சூழல் ஏற்பட்டது என் மகன் அவனுடைய படிப்பு செலவிற்கும் மருத்துவச் செலவிற்கும் வைத்த இருந்த பணத்தை PUBG என்ற கேம்க்காக செலவழித்து தொலைத்துவிட்டான் என்று வருத்தத்துடன் இருந்தது. இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here