Home ஆன்மீகம் காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் கோவில் 161 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது…

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் கோவில் 161 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது…

442
0
Share

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கினால் அனைத்து கோவில்களும் வழிபாட்டுத் தலங்களும் காலவரையின்றி மூடப்பட்டன. தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாகப் பொருளாதார சிக்கலைத் தீர்க்கும் வகையில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்காகத் தனி வழி நெறிமுறைகளும், பாதுகாப்பு வழிகாட்டுதலும் அமல்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முகக்கவசம், சனிடைசர், சமூக இடைவெளி ஆகியவை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து இன்று காலை அனைத்து கோவில்களிலும் பூஜையுடன் திறக்கப்பட்டன. பக்தர்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவிலுக்குச் செல்வதால் அமைதியுடனும் சமூக இடைவெளியுடனும் சென்றனர்.

கடன் பெறுபவர்களை எப்படி அடையாளம் காண வேண்டும் ! சீதாராமன் ஆலோசனை.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் மற்றும் உலகப் புகழ் பெற்ற அத்தி வரதர் கோவிலும் திறக்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காத்திருந்தது கடவுளை வழிபட்டனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here