Home செய்திகள் இந்தியா OTT தளத்தில் ரிலீசாகும் தளபதி விஜய் படம்…

OTT தளத்தில் ரிலீசாகும் தளபதி விஜய் படம்…

826
0
Share

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் தளபதி விஜய். இவருக்கு சவுத் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் எனப் பன்மொழிகளில் வெளியாகும்.
கடைசியாக வெளியான இவருடைய பிகில் படம் கூட  தெலுங்கு மொழியில் டப் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர் தற்போது நடித்து வெளி வரக் காத்திருக்கும் மாஸ்டர் படமும் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரத் தயாராக உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிவர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான ஜில்லா வெற்றி படமானது. அப்போது  தெலுங்கு பதிப்பில் வெளிவரவில்லை. ஆனால் தயாராக இருந்தது சில காரணங்களுக்காக அப்போது வெளியிடப்படவில்லை. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து இருந்தனர்.
இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கி வரும் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் அதைக் கத்தரித்து தமிழில் மட்டும்  வெளியிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது ஜில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்யை OTT தளத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். ஜில்லா படத்தை நீசன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜயுடன் மோகன் லால் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்.  காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் மஹத் ஆகியோரும் முக்கிய முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here