Home செய்திகள் இந்தியா இனிமேல் தொடவேண்டாம் சொன்னால் போதும் !

இனிமேல் தொடவேண்டாம் சொன்னால் போதும் !

322
0
Share

இன்றைய காலகட்டத்தில் தொடுதிரை தொழில்நுட்பம் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்த தொடுதிரை தொழில்நுட்பம் மூலம் பரவலாம் என்று மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

ATM , உணவகங்கள் என ஏராளமான இடங்களில் இந்த தொழில்நுட்பம் தான் பயன்படுத்தி வந்தனர். அதற்கு இப்போது மாற்று வழியாகக் குரல் தொழில்நுட்பத்தை சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள சென்சாரி இன்க் என்ற தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பிற்குச் செப்டம்பர் 21 முதல் தடை….

அதிலும் துரித உணவகங்களில் பார்சல் ஆர்டர் செய்வது தொடுதிரை தொழில்நுட்பம் தான் இவ்வளவு காலம் இருந்து வந்தது. ஆனால் தற்போது குரல் வழி ஆர்டர் என்பதால் காரில் இருந்தபடியே மிக எளிதில் ஆர்டர் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த தொழில்நுட்பத்திற்குப் பின்னால் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது மனிதர்களின் உச்சரிப்பைப் புரிந்துகொண்டு திரையில் அவர்களுக்கான எழுத்தையோ அல்லது புகைப்படத்தையோ காட்டும், அதை நாம் உறுதி செய்த பிறகே ஆர்டர் பதிவாகும் என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே எந்த ஒரு நோய்த் தொற்று பயமும் இல்லாமல் தைரியமாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தலாம் என நம்பிக்கை அளிக்கின்றது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here