Home செய்திகள் இந்தியா பிளாக் பேந்தர் பட நாயகன் திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி !

பிளாக் பேந்தர் பட நாயகன் திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி !

511
0
Share

மார்வெல் யூனிவர்ஸின் பிளாக் பேந்தர் பட நாயகனான சட்விக் போஸ்மேன் நேற்று திடீர் மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் இவர் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பிளாக் பேந்தர் பட நாயகனான சட்விக் போஸ்மேன் (43) கடந்த 4 ஆண்டுகளாகப் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது நாள் வரை இவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றிவர் குடும்பத்தினரே தற்போது தெரிவித்துள்ளனர். நேற்று இவருடைய லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வெல்ஸ் யூனிவர்ஸின் தயாரிப்பில் பிரபலமான தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், அயன்மேன் போன்று இவருக்கும் தனித்துவமான சூப்பர் ஹீரோ படம் இருக்கிறது. அந்த படம் தான் பிளாக் பேந்தர் இந்த படம் ஏராளமான அவார்டுகளையும் வாங்கி குவித்தது.

ஆம், மார்வெல் யூனிவர்ஸின் பிளாக் பாந்தர் படம் சிறந்த ஹீரோ, சிறந்த நடிப்பு என இரண்டு பிரிவுகளிலும் எம்.டிவி விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார். மேலும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது மற்றும் NAACP இமேஜ் விருதுகள் என ஒட்டு மொத்த விருதுகளையும் பிளாக் பாந்தர் படத்தில் நடித்ததற்காகத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் மார்வெல்ஸ் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்புகிறார் ! CSK -வில் விளையாடவில்லை..

மேலும் இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகின. மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம் படம் இன்னும் வெளியாகாமல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் உள்ளது. தற்போது இவர் மரணச் செய்தியை அறிந்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here