Home செய்திகள் இந்தியா இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிது, ஆனால் சில அனுமதிகள் பெறுவது கடினம்… வோல்ஸ்வாகன் கருத்து…

இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிது, ஆனால் சில அனுமதிகள் பெறுவது கடினம்… வோல்ஸ்வாகன் கருத்து…

427
0
Share

இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதானதாகும் அதன்பிறகு ஒரு சில அனுமதிகள் பெறுவது கடினம் என்று வோல்ஸ்வாகன் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோல்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் மேலும் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளது. ஆனால் இந்த வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் தற்போது விதித்துள்ள சீனப் பொருட்கள் இறக்குமதி தடையால் வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தற்போது கிடைக்கச் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொழில் செய்ய உகந்த சூழ்நிலையை இல்லை என்று அந்நிறுவனம் தரப்பில் தற்போது தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எளிதாக முதலீடு செய்து தொழில் தொடங்கலாம். ஆனால் முதலீடு செய்த பின்னர் தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக வோல்ஸ்வேகன் இந்தியாவின் தலைவர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here