Home ஆன்மீகம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்புப் பூஜை… இணையதளம் வாயிலாகப் பார்க்க ஏற்பாடு..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்புப் பூஜை… இணையதளம் வாயிலாகப் பார்க்க ஏற்பாடு..

1574
0
Share

நாளை ஆவணி அமாவாசை, மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்புப் பூஜை வருடாவருடம் நடத்தப்படும். இந்த ஆண்டு ஊரடங்கு என்பதால் இணையதள வாயிலாகப் பக்தர்கள் தரிசிக்க ஒளிபரப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது இதற்காக இந்த www.samayapurammariammantemple.org மற்றும் wwwtnhrce.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் Mariyamman Temple யூடியூப் சேனல் வாயிலாகவும் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய அம்மன் கோவில்களில் ஒன்றாகத் திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அமாவாசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். இதற்குத் திருச்சி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருந்து அம்மனை தரிசிக்கப் பக்தர்கள் வருவர். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை அமாவாசை கொண்டாடப்படவுள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் நலன் கருதி பக்தர்கள் அனுமதிக்க நிர்வாகம் ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

எனவே காலை 7 மணி முதல் 9 மணி வரை நடக்கும் இந்த சிறப்புப் பூஜையை www.samayapurammariammantemple.org மற்றும் wwwtnhrce.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் Mariyamman Temple யூடியூப் சேனல் வாயிலாகவும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாகப் பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம் என்றும் சமயபுரம் அம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here