Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் அதிக மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சின்ன வெங்காயம்!..

அதிக மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சின்ன வெங்காயம்!..

2687
0
Small onion
Share

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

சின்ன வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும் படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும்.

உலர்ந்தவுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும். இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன் படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும். ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக் கூடாது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் மூன்றையும் சரிசமமாக ஒன்றாக கலந்து கொண்டு பயன்படுத்தவும்.

இரவில் தூங்கு வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை எடுத்து மயிர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும். வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீனமாக இருக்கும் ஒரு காற்றடித்தாலே பறந்து விடும். எனவே இந்த எண்ணெய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முடி வளரும். இரும்புச்சத்தை அதிகரிக்கும் தேன், பேரீச்சை, கறிவேப்பிலை, முருங்கையை அதிகமாக உடலுக்கு சேர்த்திடுங்கள்.

தினமும் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளும் போது இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

அதிகமான அளவு யூரிக் அமிலம் சேருவதன் காரணமாக தான் நமக்கு சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்போது யூரிக் அமிலத்தால் ஏற்படும் கற்கள் கரைந்து விடும்.

முதுமையில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ச்சியாக எடுத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள் வராது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here