Home செய்திகள் இந்தியா நகம் பராமரிக்கும் எளிய வழிமுறைகள்..

நகம் பராமரிக்கும் எளிய வழிமுறைகள்..

423
0
Share

இன்றைய காலத்தில் நகம் வளர்ப்பதும் பேஷன் ஆகிவிட்டது. அதைப் பராமரிப்பதும் இன்றைய பெண்களின் அழகுப் பராமரிப்பும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்காகவே பல லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் பெரிய சந்தையாக இந்த நகம் அழகு துறை உருவாகியுள்ளது என்றால் நம்பமுடியுமா.

தங்களுக்கு இது போல் எந்த செலவும் செய்யாமல் வீட்டிலேயே உங்கள் நகங்களைப் பராமரிக்க சில எளிய டிப்ஸ்.

ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய்யைச் சூடாக்கி அது சற்று ஆறி வெதுவெதுப்பாக ஆனதுடன் விரல் நகங்கள் மூழ்குமாறு எண்ணெய்யில் வைக்க வேண்டும். பின்பு 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்பு எடுத்து விட்டு எண்ணெய்யைத் துணி வைத்துத் துடைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் நகங்கள் உடையாமல் சற்று வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளைப் பூண்டு : வெள்ளைப் பூண்டைத் தோல் உரித்து அதை நகங்களின் உட்புறம் வெளிப்புறம் என நகப்பகுதிகள் இடுக்கு என அனைத்திலும் தேயுங்கள். அதிலுள்ள சாறு அனைத்தும் படும் படி செய்ய வேண்டும் அல்லது அதை அரைத்து சாற்றைத் தொட்டுத் தடவலாம்.

எலுமிச்சை : எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து அதில் நகங்கள் மூழ்குமாறு வையுங்கள். அதிலேயே உங்கள் விரல்களை 10 நிமிடங்களுக்கு மூழ்கி வைக்கவும். பின்பு அதன் தோலை வைத்து நகங்களைச் சுற்றிலும் மசாஜ் செய்யும் வகையில் தேய்த்து விடுங்கள். இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான விரல் நகங்களைப் பெறுவீர்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here