Home டெக்னாலஜிஸ் AUTOMATION zoom  வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் ! இந்திய வாடிக்கையாளர்களுக்காகவா ?

zoom  வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் ! இந்திய வாடிக்கையாளர்களுக்காகவா ?

324
0
Share

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனையடுத்து நாடே workfromhome முறையைக்  கையிலெடுத்து. எனவே வீட்டிலிருந்து பணிபுரிவது, மீட்டிங் நடத்துவது போன்றவற்றிற்கு ஏராளமானவர்கள் பல்வேறு வீடியோ கான்பரன்சிங் ஆப்கள் பிரபலமடைந்தது. அதிலும் zoom ஆப் மிகவும் பிரபலமடைந்தது சர்ச்சைக்கு உள்ளானது.

இப்படி இருக்க தற்போது இந்தியா – சீனா இடையே நடைபெற்ற சண்டை காரணமாகச் சீனா தொடர்புடைய 59ஆப்களுக்கு  இந்தியா தடை விதித்தது. இதையடுத்து zoom  சீனாவுடன் தொடர்புடையது என்று இணையத்தில் ஏராளமான வதந்திகள் பரவி வந்தன.

எனவே இதனை இந்தியர்கள் தற்போது மெதுவாகப் பயன்படுத்துவதைக் குறைத்தனர். இது குறித்து இந்நிறுவனம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது மிகப் பெரிய பொருளாதாரச் சந்தையில் வாடிக்கையாளர்களை விடக்கூடாது என்பதற்காகச் சூழ் நிறுவனத்திலிருந்து இந்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

அந்த அறிவிப்பு மூலமாகத் தெரிவித்திருப்பது என்னவென்றால் நிறுவனத்தின் நிறுவனர் யுவான் சீனாவைச் சேர்ந்தவர் தான். ஆனால் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். அது மட்டுமின்றி 2007 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுவிட்டார் என்று குறிப்பிட்டு உள்ளது. எனவே மக்கள் பயப்பட வேண்டாம் என்பது அவர்களின் கருத்தாகப் பதிவிடப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here