Home செய்திகள் இந்தியா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பற்றி அதிர்ச்சி தகவல் !

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பற்றி அதிர்ச்சி தகவல் !

514
0
Share

நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது சிசன் 4ல் மிகப்பெரிய மாற்றம் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது வரை 3 சீசன்களும் தொகுத்து வழங்கினார். இந்த 4 சீசன்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க இருந்தது.Big boss 4

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிக் பாஸ் 4 சீசன் தொடங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்த ஆடிஷன் வைத்து நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அதில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் மட்டுமல்லாமல் மேலும் சிலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம் செழிக்க, நிம்மதி நிலைக்க உதவும் காமதேனு மந்திரம்…

ஆனால் தற்போது இது வரை இல்லாத அளவிற்கு பிக்பாஸ் 4ல் மிகப்பெரிய மாற்றம் செய்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. கடந்த 3 சீசன்களில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அது மட்டும் இல்லாமல் 100 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாகப் போட்டியாளர்கள் எண்ணிக்கையில் குறைவும், நிகழ்ச்சி நடக்கும் நாட்கள் குறைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதாவது 16 போட்டியாளர்களுக்குப் பதிலாக வெறும் 14 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும், 100 நாட்களிலிருந்து 80 நாட்களாகக் குறைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் போட்டி தொடங்கும் நாளன்று தான் உறுதிப்படுத்தப்பட்டு முழு தகவல் கிடைக்கும். எத்தனை பேர், எத்தனை நாட்கள் என்ற தகவல் அனைத்துமே போட்டி தொடங்கும் அன்று தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here