Home செய்திகள் இந்தியா விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!.. கேரளாவில் இனி அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுமாம்!…

விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!.. கேரளாவில் இனி அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுமாம்!…

358
0
Pettimudi keralarains
Share

கேரளாவில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் மணலுக்கு அடியில் சிக்கி பலியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அங்கு போக்குவரத்து தடைபட்டது. இந்த நிலையில், நேற்று இரவு வேளை பெட்டிமுறி என்ற இடத்தில் தொழிலாளர்கள் வசித்து வந்த 20 குடியிறுப்புகள் மண்ணில் புதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மூட்பதற்குள் 17 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகும் நிலையில். இப்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அது சம்மந்தமானப் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா பற்றி பலரும் அறியாத உண்மைகள், வதந்திகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்….

இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘நிலச்சரிவுகளுக்கு எதிரான தன்னுடைய “தாங்கும் சக்தியை கேரள மண் இழந்துவிட்டது” என்றும், இனிமேல் இப்படிப்பட்ட நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் என்று நபார்டின் (NABARD) காலநிலை விஞ்ஞானியும், நீரியல் புவியலாளருமான (Hydro Geologist) ஹரிதாஸ் தெரிவித்துள்ளார். #savewesternghats #climateemergency ’ எனத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக கேரளாவில் ஏற்படும் வெள்ளத்தின் காரணமாக இதுபோன்ற நிலச்சரிவுகள் அதிகமாக ஏற்படுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here