Home அறிவியல் விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு ! வான் வெளியில் தோன்றிய பட்டாம்பூச்சி…

விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு ! வான் வெளியில் தோன்றிய பட்டாம்பூச்சி…

399
0
Share

இந்த நவீன உலகத்தில் ஆழ்துளை முதல் வான்வெளி வரை நடக்கும் அதிசயங்களை எளிதில் உலகிற்கு எடுத்துக்காட்ட முடியும். அதுபோல் தற்போது ESO வின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் விண்வெளியில் தோன்றிய பட்டாம்பூச்சி போன்ற அமைப்பைப் படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

விஞ்ஞானிகள் இதைப் பற்றித் தெரிவித்திருப்பதாவது :
பூமியிலிருந்து கிட்டதட்ட 3000 முதல் 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் நடைபெற்ற நிகழ்வு என்று கூறியுள்ளனர். அதாவது வானத்தில் பட்டாம்பூச்சிப் போன்று ஓர் ஒளிக்காட்சி தெரியவந்துள்ளது. 19 ட்ரில்லியன் கிலோமீட்டர் அளவிற்கு இதன் இறக்கைகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன் உடற்பகுதி கிட்டதட்ட ஹைட்ரஜன், ஆக்சிஜன் அளவு 10000 டிகிரி செல்சியஸ்ற்கும் அதிகமாக இருக்கும் அப்படி இருந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த டிகிரி செல்சியஸ் சூரியனை விட இரண்டு மடங்கு வெப்ப அளவாகும்.

இது போன்ற நிகழ்வுகள் NGC 2899-ஐ பூமியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து மட்டுமே காண முடியும். அது மட்டுமில்லாமல் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியை வைத்துத் தான் பார்க்க முடியும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அற்புதமான காட்சியைக் காண்பித்த தொலைநோக்கி சிலியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு 8.2 மீட்டர் தொலைநோக்கிகள் விண்வெளியில் நடக்கும் அதிசயங்களைப் பார்ப்பதற்கு உதவுகிறது. இதுவரை வின்கற்கள், சிறு கோள்கள் மற்றும் ஈர்ப்பு அலையிலிருந்து உருவாகும் வெளிச்சமும் போன்ற ஏராளமான அதிசயங்களைக் கண்டறிந்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here