Home செய்திகள் இந்தியா இந்தாண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது ! மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் வலியுறுத்தல்..

இந்தாண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது ! மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் வலியுறுத்தல்..

342
0
Arts and Science College
Share

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு இறுதி வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று இந்திய உயர்கல்வித் துறைச் செயலர் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. எனவே பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு தரப்பினர் எப்போது பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பல மாநிலங்களில் ஆன்லைன் கல்வி முறை நடைமுறையில் உள்ளது. தற்போது மனிதவள மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மத்திய கல்வித் துறைச் செயலாளர் அமித் கரேவிடம் பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்தனர்.

அது குறித்து அமித் கரே கூறியதாவது :
கொரோனா வைரஸ் இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை. இந்த சூழ்நிலையில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு நடைபெறும். மேலும் இந்த கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை வகுப்புகளும் சரியான முறையில் நடத்தப்படவில்லை.

எனவே இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் திறப்பது கடினம். ஏனென்றால் பள்ளி கல்லூரிகள் திறந்தால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தான் கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.

மத்திய அரசின் 416 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கின்றன என்று தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையிலே பள்ளிகளை டிசம்பர் மாதம் வரை திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளேன். மாநில பள்ளிகளைப் பொறுத்தவரையில், கொரோனாவின் தீவிரத்தைப் பொறுத்து, கல்வியாண்டு தொடங்கப்படும். அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த ஆண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here