Home videos வைரலாகும் திருப்பூர் ட்ரோன் வீடியோவை வீழ்த்திய சேலம் கிரிக்கெட் வீடியொ!

வைரலாகும் திருப்பூர் ட்ரோன் வீடியோவை வீழ்த்திய சேலம் கிரிக்கெட் வீடியொ!

472
0
Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து வெளியே தேவையில்லாமல் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.salem drone

இதனை மக்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்களா என  டிரோன் கேமராக்களை கொண்டு போலீஸார் கண்கானித்து வருகின்றனர். இதனிடையே திருப்பூரில் கேரம் போர்ட் ஆடிய இளைஞர்கள் டிரோன் கேமராவை கண்டு சிதறிய வீடியோ வெளியிடப்பட்டு வைரலானது.

இந்நிலையில் சேலம் போலீஸார் ட்விட்டரில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் கிரிக்கெட் விளையாடிய கொண்டிருந்த இளைஞர்கள் டிரோன் கேமராவை கண்டதும் தெறித்து ஓடுகின்றனர். வடிவேலுவின் காமெடி வசனங்களோடு, டிரோன் கேமராவிடம் இருந்து மறைய இளைஞர்கள் செய்யும் அலப்பறைகளை தொகுத்து அதே காமெடி சேலம் மாநகரிலும் என பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

இதே போன்று திருவாரூர் போலீசாரும் ஆற்றின் ஓரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை தெரிந்து ஓட விட்டுள்ளனர். அந்த டிரோன் வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை  போலீசார்  ட்ரோன் வைத்து பிடித்து வருகின்றனர் என்று எச்சரிக்கின்றனர். மேலும் இந்த வீடியோக்கள் இணையத்தளத்திலும் வைரலாகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here