Home ஆன்மீகம் சோளிங்கர் மலைக்கு ரோப் கார்… விரைவில் பணிகளை முடிக்க மக்கள் கோரிக்கை !

சோளிங்கர் மலைக்கு ரோப் கார்… விரைவில் பணிகளை முடிக்க மக்கள் கோரிக்கை !

816
0
Share

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அது மட்டுமில்லாமல் 108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள ஒரே மலைக்குன்றின் மேல் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

யோக நரசிம்மர் யோக ஆஞ்சநேயர் என இருவருக்கும் தனித்தனி கோவில்கள் இங்கு எழுப்பப்பட்டுள்ளது. யோக நரசிம்மரை காண்பதற்கு 1305 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயரை காண்பதற்கு 450படிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கோவில் பிரசித்தி என்னவென்றால் திருமணத்தடை, குழந்தை வரம், பில்லி சூனியம், பேய் பிசாசு போன்ற இன்னல்களிலிருந்து விடுபட வேண்டுதல்கள் இங்கே நிறைவேற்றப்படும் என்பது ஐதீகம். அண்டை மாநிலங்களிலிருந்தும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இப்படி பிரசித்தி பெற்ற இந்தக் கோவில் படி ஏற சிரமமாக இருப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். இதனால் 2014 ஆம் ஆண்டு ரோப்கார் அமைக்க ரூபாய் 8.27 கோடி அரசின் மூலம் ஒதுக்கப்பட்டது. மேலும் இந்தக் கோவிலில் கார்த்திகை மாதம் 5 வாரங்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இது மிகவும் சிறப்புமிக்கது. எனவே பக்தர்கள் இந்த கார்த்திகை மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் பங்குகள்…

அதற்கு நரசிம்மர் கோவில் அதிகாரிகள் கூறியிருப்பதாவது :
இந்த கோவிலுக்கு செல்ல 448 மீட்டர் உயரத்தில் செங்குத்தாக ரோப்கார் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடம் 175 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பொருத்துவது கம்பிவடம் அமைப்பது என 85 சதவீத பணிகள் முடிந்து விட்டது..

இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் சோதனை ஓட்டம் செய்த பிறகே பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். ரோப் காரில் ஒரு முறைக்கு 4 நபர் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய முடியும் நான்கு ரோப் கார் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பக்தர்கள் பெரிய மலைக்கு சென்று வர முடியுமென்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here