Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் Reliance செட் – டாப் பாக்சில் இனி Amazon , Hotstar ODD செயலிகளுக்கான வசதி...

Reliance செட் – டாப் பாக்சில் இனி Amazon , Hotstar ODD செயலிகளுக்கான வசதி !

478
0
Odd apps
Share

அமேசான் பிரைம் வீடியோ செயலிக்கான வசதியை Reliance JIO நிறுவனம் தனது JIOFIBER செட் டாப் பாக்சில் வழங்கியுள்ளது. சென்ற ஆண்டு JIOFIBER ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆயினும், அதில் அதிகளவு ODD செயலிகளுக்கான வசதி வழங்கப்படவில்லை.

மேலும் முன்னணி ODD செயலிகளான அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்றவட்றிற்க்கான வசதிகள் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது அமேசான் பிரைம் வீடியோவுக்கான வசதியை வழங்கியுள்ளது. எனினும் இதில் நெட்ஃப்ளிக்ஸ் வசதி வழங்கவில்லை.

JIOFIBER ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் பயன்படுத்துவோர், செயலிகளுக்கான பட்டியலில் அமேசான் பிரைம் வீடியோ ஐகானை பார்க்க முடியும். பின்பு இதனை அவரவர் அமேசான் பிரைம் சந்தா கொண்டு செயலியை தொடர்ந்து பயன்படுத்த துவங்க முடியும்.set top

தற்போது JIOFIBER செட் டாப் பாக்சில் G5, ஆல்ட் பாலாஜி, சோனிலிவ், வூட், ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் போன்ற ODD செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்பு Reliance JIO நிறுவனத்தின் புதிய வீடியோ கான்பரன்சிங் செயலியான JIOMeet அறிவிக்கப்பட்டது. இந்த செயலி அந்நிறுவனத்தின் 2019-2020 நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியீட்டின் போது வெளியானது. புதிய செயலி ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற செயலிகளின் பட்டியலில் புதுவரவாக இணைய உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here