Home செய்திகள் இந்தியா உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய பிராண்ட் ரிலையன்ஸ்…

உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய பிராண்ட் ரிலையன்ஸ்…

349
0
Share

உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய பிராண்டாக ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்துள்ளது. முதல் இடத்தை ஆப்பிள் நிறுவனம் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராண்ட்களின் நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பியூச்சர் பிராண்டு நிறுவனத்தின் பியூச்சர் பிராண்டு இண்டெக்ஸ் – 2020 கருத்துக்கணிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் அந்நிறுவனம் கூறியிருப்பதாவது :
இந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் ஒவ்வொரு பண்புகளிலும் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுவது ரிலையன்ஸ். மிகவும் மரியாதைக்குரிய நிறுவனமாகும். மக்களுடன் ஒன்று பிணைந்து இருக்கும் இந்நிறுவனம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமாக இருந்த இந்நிறுவனத்தை டிஜிட்டல் நிறுவனமாக மாற்றியுள்ளார். இந்திய மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் டிஜிட்டல் உலகத்தில் இந்த நிறுவனம் தன் கால் தடத்தைப் பதித்து உள்ளது.

கூகுள், ஃபேஸ்புக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றியுள்ளனர். இதே போல் ஏராளமான பெரிய நிறுவனங்களான என்விடியா, மொடாய், நைக், மைக்ரோசாப்ட், ஏ.எஸ்.எம்.எல்., பேபால், நெட்பிளிக்ஸ்’ ஆகிய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here