Home செய்திகள் இந்தியா டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்…

டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்…

570
0
Share

டிக் டாக் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனத்திடம் இந்தியா வணிகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற முயன்று வருவதாகவும் அது குறித்து முதலில் டீலிங் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் டெக்கரஞ் செய்தி நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட எல்லை மோதல் காரணமாகச் சீனாவுடன் தொடர்புடைய 59 மொபைல் செயலிகளைத் தடை செய்தது. ஏனென்றால் தேசியப் பாதுகாப்பு நலன் கருதியும், பயனர்கள் தகவல்கள் நலன் கருதியும் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதில் மிகப் பிரபலமான ஒன்று டிக் டாக்
செயலி.

அதன் பிறகு அமெரிக்கா உள்ளிட்ட மிகப் பெரிய நாடுகளில் சீனா தொடர்புடைய செயலிகளைத் தடை செய்ய முடிவெடுத்தனர். அதனால் டிக்டாக் செயலியைத் தடை செய்ய இருப்பதாகத் தெரிவித்தனர். அதன் பிறகு மைக்ரோசாஃப்ட் அமெரிக்க உரிமத்தை வாங்க டீலிங் பேசி இருப்பதாகும் செய்திகள் வெளிவந்தன. ட்விட்டர் நிறுவனமும் அமெரிக்க உரிமத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் செய்திகள் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தற்போது டிக்டாக் இந்தியா உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற விருப்பம் உள்ளதாக இது குறித்த பேச்சுவார்த்தை முயற்சி இன்னும் முடிவடையவில்லை. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இது வரை இது தொடர்பாக இரு நிறுவனமும் இந்த செய்திக்கு எதிர்ப்பு மற்றும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here