Home அறிவியல் வீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து மறுசுழற்சி முக கவசம்…

வீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து மறுசுழற்சி முக கவசம்…

364
0
Share

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே மாஸ்க் என்ற முகக்கவசம் ஆனது அனைத்து மக்களின் நண்பன் ஆகிவிட்டது. இந்த மாஸ்க் எளிதில் நம் உடம்பிற்குள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என்று நம்பிக்கை அளித்துள்ளது. இப்படி இருக்க இந்த மாஸ்க் ஏராளமான வகை வகையான மாஸ்க்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

அந்த வகையில் தற்போது பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த petit pil என்ற நிறுவனம் புதிய மாஸ்க் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த மாஸ்க்கை பேட்டா மாஸ்க் என்று பெயர் வைத்துள்ளனர். வீணாகும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு இந்த மாஸ்க்கை உருவாக்கியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த மாஸ்க் மறுசுழற்சி செய்யும் வகையில் உள்ளது.

நம் முகத்திற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் இந்த மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளது. 30 டிகிரி செல்சியஸ் கொதி நீரில் துவைத்து பலமுறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடவில்லை. ஆனால் யூஸ் அண்ட் த்ரோ மாஸ்க் எனப்படும் ஒரு முறை பயன்படுத்திய மாஸ்கை தற்போது குப்பைகளில் குவிந்து வருகின்றது. இதற்கு மாற்று வழியாக இந்த பிளாஸ்டிக் முககவசங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் தற்போது ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் மாஸ்க்களால் ஏராளமான நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பேட்டா ம மாஸ்க் வீணாகும் பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து தயாரித்துள்ளோம். அது மட்டுமில்லாமல் பலமுறை துவைத்துப் பயன்படுத்தலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here