Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் பூசணி விதைகள்!.. அவற்றின் சத்துக்களும் பயன்களும் !…

உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் பூசணி விதைகள்!.. அவற்றின் சத்துக்களும் பயன்களும் !…

3006
0
Pumpkin seeds
Share

பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மெக்னீசியம் கிடைத்துவிடும்.

இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.

பூசணி விதைகளுக்கு அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. பூசணி விதைகளில் உள்ள சத்துகளையும், நம் ஆரோக்கியத்துக்கு அள்ளி வழங்கும் நலன்களையும் அறிந்து கொள்ளலாம்.

இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

உணவில் அடிக்கடி பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!…

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஏற்படுவது தான் ஆஸ்டியோபோரோசிஸ். பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here