Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் ஒர்க் பிரம் ஹாம் ஆல் ஏற்படும் பிரச்சனைகள். நாம் செய்யும் மிகப் பெரிய தவறுகளால் ஏற்படும்...

ஒர்க் பிரம் ஹாம் ஆல் ஏற்படும் பிரச்சனைகள். நாம் செய்யும் மிகப் பெரிய தவறுகளால் ஏற்படும் சோர்வுகள்…

308
0
Work from home
Share

தூங்கி எழுந்தவுடன் லேப்டாப்பை வைத்து வேலை செய்வது தான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. இதனால் நமக்குச்
சோர்வும் ஆரோக்கிய பிரச்சினையும் ஏற்படும்.

நாம் அலுவலக பணியில் இருக்கும்போது தினமும் காலையில் எழுந்து காலைக்கடன் முடித்து புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக வேலைக்குச் செல்வோம். அவ்வாறு செல்லும் போது அலுவலகத்தில் அன்று முழுவதும் நான் புத்துணர்ச்சியுடன் இருப்போம்.

ஆனால் இன்று நம் வீட்டில் தூங்கி எழுந்தவுடன் வேலை என்ற எண்ணத்திற்கு ஆளாகி உள்ளோம். ஒரு சில நேரம் படுக்கை அறையிலேயே வேலையைத் தொடங்கும். அந்த சூழ்நிலை நமக்குத் தூக்கத்தையே அளிக்கும். வீட்டில் தானே இருக்கிறோம் என்று நம் விருப்பப்படி வேலை செய்வோம் அதுவும் பெரும் தவறு.

மேலும் அலுவலகத்தில் நற்பெயர் வாங்க வேண்டுமென்று வேலையில் முழு நோக்கத்துடன் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கு பெறாமல் விடுமுறை தினங்களிலும் வேலை என்று ஒரு பக்கமாக முழு நேரமும் பணிபுரிவது தங்களுக்குச் சோர்வை அளிக்கும். தேவையான ஓய்வு பெற்றுப் பணி தொடர வேண்டும்.

அலுவலகத்தில் இருக்கும் போது பிரேக் என்ற ஒரு குறிப்பிட்ட நேரம் நண்பர்களுடன் வெளியில் செல்பவர்கள் வீட்டில் வேலை என்பதால் இருக்கும் இடத்திற்கே அனைத்தும் வந்து விடுகிறது. இதனால் நம் உடலில் எந்தவித அசைவும் ஏற்படாமல் உடல் பருமனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை எழுந்து நடைப்பயிற்சி போன்ற ஒரு பத்து நிமிடம் சென்றுவிட்டு அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பத்து நிமிடம் கலந்துரையாடிவிட்டு பணியைத் தொடங்கலாம். இதனால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் அனைத்து உடல் பாகங்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here