Home அறிவியல் ஸ்ரீஹரி கோட்டாவில் தனியார் ஏவுதளம் ! ISRO தலைவர் அறிவிப்பு..

ஸ்ரீஹரி கோட்டாவில் தனியார் ஏவுதளம் ! ISRO தலைவர் அறிவிப்பு..

393
0
ISRO
Share

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO தனியார்த் துறைக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் ஏவுகணை ஏவுதளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்க இருப்பதாக ISRO தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO வில் ஸ்ரீஹரி கோட்டாவில் தனியார் விண்வெளி துறைக்கும் ஏவுகணை ஏவுதலுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக முடிவெடுத்துள்ளோம்.

இதற்காக எந்தவித கட்டணமும் வசூலிக்க மாட்டோம். எங்களின் முழு ஒத்துழைப்புடனும் ஆலோசனையுடனும் ஏவுகணை ஏவுதல் முயற்சியிலும் ஈடுபடுவோம். ஸ்ரீஹரி கோட்டா ஏற்கனவே ISRO விற்கு 2 ஏவு தளங்கள் உள்ளன. தனியார்த் துறைக்குத் தேவைப்பட்டால் ஏவுதளம் அமைத்துக் கொள்ளலாம். இதற்காக எங்கள் ஏவு தளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதற்காகத் தாங்கள் விண்ணப்பித்த பிறகு தனியார் தேவைகள் அடிப்படையில் அனுமதி வழங்க விரும்புகிறோம். இதனால் அவர்கள் தேவைகளை நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ISRO தலைவர் சிவனிடம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது :
அதற்கு ISRO ன் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கொரோனா பரவல் காரணமாகக் காலவரையின்றி மூடப்பட்டது. அது மட்டுமில்லாமல் தற்போது அங்கு ஏராளமான கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ளது. எனவே தற்போதைக்கு அங்கு செயற்கைக்கோள்கள் ஏவுதல் என்பது மிகக் கடினமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் நிலையைப் பொறுத்து அங்குச் செயற்கைக் கோள்களை ஏவ முயற்சிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here