Home செய்திகள் இந்தியா அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி ! மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ! பொதுமக்கள் ஆவல்..

அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி ! மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ! பொதுமக்கள் ஆவல்..

379
0
Share

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான Reliance இண்டஸ்ட்ரீஸ் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்கூட்டம் நடத்தும். இந்த நிகழ்வு மும்பையின் நடக்கும் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சி ஊரடங்கு காலம் என்பதால் இணைய வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி Reliance இண்டஸ்ட்ரீஸ் 43வது ஆண்டு விழாவாகும்.

இந்நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாகப் பேசிய முகேஷ் அம்பானி எங்கள் நிறுவனத்தில் Google முதலீடு செய்ய உள்ளது. அது மட்டுமில்லாமல் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

Google நிறுவனமும் JIO நிறுவனமும் இணைந்து 5G ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை தயாரிக்க உள்ளோம் என்று ஒப்பந்தம் இயற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதற்காக JIO -வின் 7.7 சதவீத பங்குகளை 33,737 கோடி ரூபாய்க்கு Google வாங்கி உள்ளது என்று தெரிவித்தார். தற்போதுள்ள 4G, 5G மொபைல்களின் விலையை காட்டிலும் மிக மிகக் குறைந்த விலையில் இந்த மொபைல் போன் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். JIO 5G சேவைக்குத் தயாராக உள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அது மட்டுமின்றி டவர்கள் கிடைத்தவுடன் 5G சோதனை விரிவடையும் என்றார். இதனையடுத்து இந்த 5G மொபைல் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் JIO மற்றும் ஃபேஸ்புக் கூட்டணியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள e-commerce தளமான JIO Mart க்கு வாட்ஸ் அப்பை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் JIO நிறுவனத்தில் OTT தளமான JIO TV அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானி மற்றும் அவரது மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோரை கொண்டு திறந்து வைத்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here