Home செய்திகள் இந்தியா மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்…

மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்…

362
0
Share

நேற்று ஃபிலிப்கார்ட் பிக் பிக் பில்லியன் டேஸ் தொடங்கியது. இதில் கூகுள் நிறுவனத்தால் தயாரித்து விற்பனை செய்யப்படும் கூகுள் பிக்சல் மொபைல் ஃபிளாஷ் சேல் முறையில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டது. வெளிவந்த அரை மணி நேரத்திலேயே முதற்கட்டமாக விற்பனை முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக கூகுள் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் விரைவில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என்றும் அது பற்றிய விவரங்களை வெளியிடுவதாகவும் கூகுள் இந்தியா தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 4ஏ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு வந்தது.

பண்டிகை கால விற்பனை நிறைவுற்றதும், பிக்சல் 4ஏ மாடல் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் காரணமாக குறுகிய கால சலுகை வழங்கப்பட்டத.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here