Home செய்திகள் இந்தியா ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டு திருட்டு ! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 25 ஆப்கள் அதிரடி நீக்கம்…

ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டு திருட்டு ! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 25 ஆப்கள் அதிரடி நீக்கம்…

372
0
Share

சமூக வலைத்தளங்களில் முக்கிய ஒன்றானது பேஸ்புக். ஆனால் இதில் பயனர்களின் பாஸ்வேர்டு திருடுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 25 ஆப் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஈவினா வெளியிட்டுள்ளது.
google playஇந்த 25 ஆப்களுமே 25 லட்சத்திற்கும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டவை. இத்தகைய சூழலில் கூகுள் பிளே ஸ்டோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆப் இருந்தன என்றும் இது என தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இந்த 25 ஆப்கள்  குறித்து தகவல்களைக் கூகுள் பிளே ஸ்டோர் இடம் அனுப்பியிருந்தது. மேலும் எச்சரிக்கையும் விடுத்தது அதனடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நீக்கிய ஆப்கள் பெரும்பாலானவை வால்பேப்பர், வீடியோ எடிட்டர், போட்டோ எடிட்டர் போன்றவற்றுடன் தொடர்பு உடையதாக கருதப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு யூசர் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துகிறார் என்றால் அவர் ஃபேஸ்புக்கில் உபயோகப்படுத்தும் போது இந்த ஆப்கள் உள்ள மால்வேர்கள் அதன் வேலையை தொடங்கு கிறது.
என்னவென்றால் மற்றொரு பவுசரை ஓப்பன் செய்கிறது. இது பயனர்  அறியாத வண்ணம் இருக்கிறது. பயனர் பதிவிடும் ஃபேஸ்புக் தகவல்களை இந்த மல்வேர் சேகரித்து வைத்துக் கொள்கிறது. அதிலும் குறிப்பாக பாஸ்வர்ட் போன்றவற்றைத் தான் முக்கியமாகச் சேகரிக்கிறது.
பேஸ்புக் நீல வண்ணத்தில் இருக்கும் ஆனால் இது வைரஸ் ஆனது வெள்ளை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ காணப்படும் இப்படிக் காணப்பட்டால்  திருட்டு நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here