Home வேலைவாய்ப்புகள் கல்வி தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பிற்குச் செப்டம்பர் 21 முதல் தடை….

தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பிற்குச் செப்டம்பர் 21 முதல் தடை….

411
0
Tamilnadu schools admission
Share

செப்டம்பர் 21ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு நடத்தத் தமிழக அரசு தனியார்ப் பள்ளிகளுக்குத் தடை விதித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பள்ளி மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இருப்பினும் கல்வி ஆண்டை கடைப்பிடித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தனி கல்வி தொலைக்காட்சி தமிழக அரசு தொடங்கி வைத்தது. இந்த தொலைக்காட்சி வாயிலாக அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப் பட்டு வருகிறது. இதே போல் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்படும். அதே போல் இந்த ஆண்டு காலாண்டு நடத்தப்படவில்லை என்றாலும் கூட செப்டம்பர் 21 முதல் 25 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தனியார்ப் பள்ளிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனென்றால் மாணவர்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் கல்வி தொலைக்காட்சிகளில் மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனியார்ப் பள்ளிகளை 26ம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் வகுப்பு நடத்திக்கொள்ளுமாறும் பள்ளி நிர்வாகிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here