Home செய்திகள் இந்தியா ஒன்பிளஸ் 8T வெளியாகும் தேதி அறிவிப்பு…

ஒன்பிளஸ் 8T வெளியாகும் தேதி அறிவிப்பு…

368
0
One Plus 8
Share

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பிரபல நிறுவனமாகவும் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாகவும் ஒன்பிளஸ் இருந்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நார்டு, ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.

கடந்தாண்டு ஒன்பிளஸ் 7 மாடல் ஸ்மார்ட்போன் வருகைக்கு பிறகு ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் அறிமுகம்  செய்யப்பட்டது. இந்த இரண்டு மாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையானது. அதே போல் இந்தாண்டும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 8Tஸமார்ட்போன் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அக்டோபர் 14 ம் தேதி வெளியாக உள்ளதாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 865 SoC பிராசசர் இருக்கலாம் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அட்வான்ஸ் வசதிகள் ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இஷான் அகர்வால் என்பவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 14 ஆம் தேதி ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனின் அறிமுகம் தள்ளிபோயிருக்கலாம். இருப்பினும் ஒன்பிளஸ் தரப்பில் இதுதொடர்பாக இன்னும் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை கண்கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களால் ஏற்படும் பாதிப்புகள்

ஒன்பிளஸ் 8T சிறப்பம்சங்களில் (எதிர்பார்க்கப்படுபவை)
OS : ஆண்ட்ராய்டு 11 ஆக்ஸிஜன் ஓஎஸ் 22
டிஸ்பிலே ஸ்கிரீன் : 6.55 இன்ச் ஃபுல் ஹெச்டி
பிராசசர்: ஸ்நாப்டிராகன் 865+ SoC
ரேம்: 8GB
கேமரா: பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள்.
பேட்டரி சக்தி: 4,500mAh


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here