Home செய்திகள் இந்தியா டிரம்பை எதிர்த்து ஒபாமா பிரச்சாரம்..

டிரம்பை எதிர்த்து ஒபாமா பிரச்சாரம்..

436
0
Share

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபரான டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல் துணை அதிபராக மைக் பென்சும் போட்டியிடுகிறார். இவர்களை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருப்பதால் இரு தரப்பிலும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

பல்வேறு கருத்து கணிப்பில் ஜோ பிடன் தான் அடுத்த அதிபர் ஆவார் என்று முடிவு வந்துள்ளது. மக்கள் ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க தற்போது முன்னாள் அதிபரான ஒபாமா ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சரசரவென ஏறிய தங்கத்தின் விலை விறுவிறுவென 1464 ருபாய் இறங்கியது. இன்றைய விலை என்ன தெரியுமா ?

பென்சில்வேனியாவில் நடைபெற உள்ள பிரச்சாரத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here