Home செய்திகள் இந்தியா நோக்கியாவின் புதிய முயற்சி! ரோபோட்டிக் ஆய்வுக் கூடம்..

நோக்கியாவின் புதிய முயற்சி! ரோபோட்டிக் ஆய்வுக் கூடம்..

374
0
Share

மொபைல் தொழில் நுட்பத்தில் மிகப்பிரபலமான நிறுவனம் நோக்கியா. தற்போது ரோபோட்டிக் ஆய்வுக்கூடம் திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நோக்கியா மொபைல் போன் என்றாலே அனைவரும் அறிவர். ஆரம்பக் காலத்திலிருந்து தற்போது வரை நோக்கியா மொபைல் போன்கள் பிரபல்யமானவை. இப்படியிருக்க இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் சர்ச்சையிலும் சிக்கின. ஆனால் தற்போது இந்நிறுவனம் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக இந்தியாவில் ஆய்வுக் கூடம் ஒன்றையும் நிறுவ உள்ளது.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IIIs ) என்ற இடத்தை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த இடத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் ஏராளமான தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு திறன் வாய்ந்த ரோபோட் தயாரிக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளது. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here