Home கட்டுரை பாரத் பெட்ரோலியத்தின் முதலீடு செய்வதில் புதிய சிக்கல் ! வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சம்…

பாரத் பெட்ரோலியத்தின் முதலீடு செய்வதில் புதிய சிக்கல் ! வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சம்…

320
0
Share

பிரிட்டீஷ் பெட்ரோலியம் எனப் பெயர்பெற்ற, பி.பி., நிறுவனம் மற்றும் பிரான்சைச் சேர்ந்த டோட்டல் நிறுவனம் ஆகிய இரண்டும் இந்திய பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்கும் முயற்சியைக் கைவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஏனென்றால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ள இடங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் உள்ள கடுமையான சட்டம் ஆகியவை காரணமாக உள்ளது. இவை தான் இந்த முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. அதிலும் மும்பை மற்றும் கொச்சியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையங்களை எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வதோ அல்லது புதிய ஆலை அமைப்பதோ இயலாத காரியம் என எண்ணுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.Petrol,Diesel Chennai

இந்த நிறுவனத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் இதுவரை பணியாற்றி வருகின்றனர். இங்கு அமலில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைப்பதும் சிரமமாக என்கின்றனர்.

இந்த பாரத் பெட்ரோலியம் நாட்டின் மூன்றாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும். மேலும் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமும் இதுவே. தற்போது பாரத் பெட்ரோலியத்தில் அரசு தன் வசம் வைத்துள்ள, 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

ரஷ்யாவைச் தலைமை இடமாகக் கொண்ட ரோஸ்நெப்ட், சவுதி அரேபியாவைச் மையமாகக் கொண்ட சவுதி அராம்கோ, உள்நாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், ஏல முயற்சியில் களமிறங்கும் என கருதப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here