Home செய்திகள் இந்தியா பூமியை நோக்கி வரும் புதிய வால் நட்சத்திரம் ! வெறும் கண்ணால் காண முடியும்…

பூமியை நோக்கி வரும் புதிய வால் நட்சத்திரம் ! வெறும் கண்ணால் காண முடியும்…

589
0
vaal
Share

நாசாவால் ஒரு புதிய வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு NEOWISE என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரமானது பூமியை நோக்கி வேகமாகப் பயணித்து வருகிறது. தற்போது இந்த வால் நட்சத்திரம் பூமியிலிருந்து 700 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நட்சத்திரம் உணவு ஜூலை மாதம் 22, 23 தேதிகளில் 64 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்.

இந்த வால் நட்சத்திரத்தை நாளை முதல் 20 நாட்களுக்குச் சூரிய மறைவிற்குப் பிறகு இந்தியாவிலிருந்து காண முடியும் என்கிறார்கள் வானியல் வல்லுநர்கள். அது மட்டுமின்றி மற்ற வால் நட்சத்திரங்கள் போன்று இல்லாமல் வெறும் கண்களாலேயே காண முடியும் என்பது தனிச் சிறப்பாகும். இந்த வால் நட்சத்திரம் ஆகஸ்ட் மாதம் வரை பூமியில் இருக்குமாம். அதன் பிறகு பூமியை விட்டு விலகிச் செல்வதைத் தொலைநோக்கி கொண்டு காண முடியும் என்கிறார்கள் நாசா வானியல் அறிஞர்கள்.

எப்படியோ இது ஒரு சூப்பர் வால்நட்சத்திரம் தான் என்பதில் அய்யமில்லை.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here