Home செய்திகள் இந்தியா நாளுக்கு நாள் புது புது சேலஞ்சு ! கருப்பு வெள்ளை சேலஞ்ல் நடிகைகள் ஆர்வம்…

நாளுக்கு நாள் புது புது சேலஞ்சு ! கருப்பு வெள்ளை சேலஞ்ல் நடிகைகள் ஆர்வம்…

150
0
Share

கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தியதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் சமூகவலைத்தளத்தில் ஏராளமான சேலஞ்கள் அதிகரித்து வருகிறது. அதில் நடிகர், நடிகைகளும் தங்கள் ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். இதனால் இந்தச் சேலஞ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வைரலாகி வருகின்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்கிற்கு வழி தெரியாது வீட்டிலேயே அனைவரும் முடங்கி விட்டனர். இதனால் பொழுதைக் கழிப்பதற்கு ஏராளமான சேலஞ்கள் சமூக வலைத்தளங்களின் வெளியிட்டு வருகின்றன. இதில் நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள, சில நடிகைகள் ஒரு கட்டத்தில் எல்லை மீறிப் புகைப் படங்களையும், சேலஞ்களையும் வெளியிட்டு வருகின்றனர். அது ஒரு சிலருக்கு முகம் சுளிப்பு ஏற்படுத்துகிறது.

அடிக்கடி இந்த சேலஞ்கள் சமூக வலைத்தளத்தில் வருகிறது. இதில் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பெண்களுக்கு ஆதரவாகப் பெண்கள் என்ற ஒரு சேலஞ் ட்ரெண்டாகி வருகிறது. women support women என்ற பெயரில் இதை நடிகர் நடிகைகள் தொடங்கி வைத்தனர்.

அதாவது அவர்களது கருப்பு-வெள்ளை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் கருப்பு வெள்ளை படங்களாகவே உள்ளன. சினிமா நடிகைகள் இதனை முதலில் வெளியிட்டதை அடுத்து தற்போது பொதுமக்களும் இந்த சேலஞ்ல் ஈடுபட்டு வருகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here