Home செய்திகள் இந்தியா ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வைரசை நீக்கும் புதிய சாதனம் ! சாம்சங் அறிமுகம்..

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வைரசை நீக்கும் புதிய சாதனம் ! சாம்சங் அறிமுகம்..

495
0
Share

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வைரஸ் எதில் எல்லாம் பரவும் என்று தெரியாது. நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மொபைல் போன்களிலும் இந்த வைரஸ் இருக்க வாய்ப்புள்ளது. இதனைச் சுத்தப்படுத்தும் வகையில் யு.வி. ஸ்டெர்லைசர் மூலம் சுத்தப்படுத்த முடியும் என்று சாம்சங் ஒரு புது வயர்லெஸ் சார்ஜிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகிற்கே வயர்லெஸ் சார்ஜிங் முறை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது கொரிய நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங் தான். ஆனால் தற்போது இந்நிறுவனம் வைரஸ் கிருமிகளையும் மொபைல் போனில் இருந்து நீக்கும் வண்ணம் ஒரு புது யு.வி. ஸ்டெர்லைசர் என்ற ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சாதனத்தின் மூலம் தங்கள் ஸ்மார்ட் போன்களையும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து கேட்ஜெட்களிலும் உள்ள கிருமிகளை எளிதில் நீக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. வெறும் 10 நிமிடத்தில் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளது. இதன் விலை 3599 மட்டுமே. இது ஆகஸ்ட் மாதத்திலிருந்து அனைத்து சாம்சங் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய சாம்சங் சாதனத்தின் மூலம் அனைத்து கேட்ஜட்கள் மற்றும் சாதனங்களை எளிதில் சுத்தம் செய்து கிருமிகளை நீக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு இன்டெர்டெக் (Intertek) மற்றும் எஸ்ஜிஎஸ் (SGS) போன்ற தரச்சான்றிதழ் அமைப்புகளும் சோதனை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்திற்கு 99% பாக்டீரியா மற்றும் வைரஸ்களை நீக்கும் தன்மை கொண்டது என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது மொபைல் கூட்டணி நிறுவனமான சி&டி உடன் இணைந்து இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் மிகவும் சிறிய அளவிலும், தரத்துடனும் உள்ளது. முதலில் இந்த சாதனத்தை கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா (Galaxy S20 Ultra) மற்றும் கேலக்ஸி நோட் 10+ (Galaxy Note 10+) போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு உருவாக்கியுள்ளது.

இந்த சாதனத்தில் அதில் ஒரு சிறிய பட்டன் அமைக்கப்பட்டுள்ளது. அதை வைத்துத் தான் இந்த சாதனத்தை இயக்கவும் அணைக்கவும் முடியுமாம். யு.வி. ஸ்டெர்லைசர் வயர்லெஸ் சார்ஜருடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here