Home செய்திகள் இந்தியா twitter பயன்படுத்தப் பணமா?

twitter பயன்படுத்தப் பணமா?

379
0
twitter
Share

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது twitter.பொது மக்களும் பிரபலங்களும் தங்கள் கருத்துகளை இதில் தெரிவித்து வந்தனர். இப்படி இருக்க தற்போது இது பயன்படுத்த பணம் செலுத்த சொன்னால் என்ன செய்வது.

இந்த twitter, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இது நாள் வரை இலவசமாகவே சேவை வழங்கி வந்தனர்.  அதில் வரும் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயே இந்த நிறுவனத்திற்கான மிகப்பெரிய வருமானமாக இருந்து வருகிறது.

ஆனால் விளம்பரம் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு வகையில் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக twitter முடிவு எடுத்தால் எதிர்காலத்தில் பணம் செலுத்த நேரிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலும் விளம்பரம் செய்வதற்கு ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. சீனா இந்தியா வர்த்தகம் சண்டை காரணமாகவும் சீனப் பொருட்கள் பயன்படுத்துவதை எதிர்ப்பதன் காரணமாக ஏராளமான ஆன்லைன் விளம்பரங்கள் தற்போது குறைந்து வருகின்றன.

இதனால் ஃபேஸ்புக்,twitter போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் வருமானத்தில் பெரும் பங்கு சரிந்துள்ளது. இதனைச் சரி செய்வதற்காகக் கட்டண சேவை தொடங்க ஏராளமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் twitter தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் twitter தரப்பிலிருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here