Home செய்திகள் இந்தியா சுதந்திர விழாவிற்காக OTT யில் மாஸ்டர் படம் ரிலீசா ? amazon விளம்பரத்தால் சர்ச்சை..

சுதந்திர விழாவிற்காக OTT யில் மாஸ்டர் படம் ரிலீசா ? amazon விளம்பரத்தால் சர்ச்சை..

436
0
Master movie
Share

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே 100 கோடி வசூலைக் குறுகிய காலத்திலேயே கடந்து ஹிட்டடிக்கும். இப்படியிருக்க இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் கோடை வெளியீட்டிற்குத் தயாராக இருந்தது.

ஆனால் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகள் அளித்தாலும் திரையரங்குகளிலும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் சில படங்கள் OTT ஆன்லைன் தளத்தில் வெளியீடு செய்யப்பட்டு வந்தது.

அந்த வரிசையில் விஜய் நடித்த மாஸ்டர் படமும் வெளியீடு செய்யப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதற்குப் படக் குழுவினர் மாஸ்டர் படம் எவ்வளவு காலமானாலும் திரையில் தான் வெளியீடு செய்யப்படும் என்று உறுதியாகத் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது amazon OTT தளத்தில் மாஸ்டர் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் மூழ்கினர்.

பின்னர் இது தொடர்பாகப் படக்குழுவினர் தரப்பிலிருந்து பதில் அளித்துள்ளனர். இந்த மாஸ்டர் படம் கொரியன் நாட்டின் படம். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமில்லை என்று தெளிவுபடுத்துகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பத்திலிருந்து வெளியில் வந்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here