Home செய்திகள் இந்தியா ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த நாயகன் ! 12 வருடங்களுக்கு பிறகு யுவராஜ் வெளியிட்ட...

ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த நாயகன் ! 12 வருடங்களுக்கு பிறகு யுவராஜ் வெளியிட்ட பரபரப்பு தகவல்…

515
0
yuvaraj singh
Share

12 வருடங்களுக்கு பிறகு ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்ததற்கு குறித்தும் அதற்கு யார் காரணம் என்ற ரகசியத்தை ஆல் ரவுண்டரும் சிக்ஸர் மன்னனுமான யுவராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு ஓவரில் 6 பந்துகளுமே சிக்ஸர் அடித்து சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இவர் 20007-ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர் பிராட் பந்துவீச்சில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸரடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார்.

இந்த நிகழ்வை தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் யுவராஜ் நினைவு கூறுகிறார்.

அந்த ஆட்டத்தில் நான் களத்தில் இருந்தபோது இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப் என்னை சீண்டினார். இதனால் எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அச் சமயத்தில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீசினார். ஏற்கனவே பயங்கர உத்வேகத்தில் இருந்த என்னை பிளிண்டாஃப் சீண்டல் மேலும் அதிகப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசினேன். அடித்து முடித்ததும் பிளிண்டாஃபை பார்த்து எனது ஆதங்கத்தை தீர்த்தேன்.6 in one over

இச்சாதனைக்கு பிளிண்டாப் மட்டும் காரணமல்ல மற்றொரு நபரும் உள்ளார். அவர் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் என்னுடைய பந்துவீச்சில் ஐந்து சிக்ஸர் அடித்த இங்கிலாந்து வீரர் Dimitri Mascarenhas. இதையும் நினைவில் வைத்துக் கொண்டு தான் ஆறாவது சிக்ஸரை பறக்கவிட்டேன் என 12 வருட ரகசியத்தை யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்த அடுத்த நாள் ஸ்டூவர் பிராட் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய் என கூறினார். மேலும் எனது மகனுக்காக உன்னுடைய ஜெர்ஸியில் ஆட்டோக்ராப் போட்டு தருவாயா என கேட்டார்.

உடனே என் இந்திய அணி ஜெர்ஸியில் கையெழுத்திட்டு வழங்கினேன். அதிலும் “உங்களுடைய வலியை நான் அறிவேன், ஏனென்றால் என்னுடைய பந்துவீச்சிலும் ஐந்து சிக்ஸ் அடிக்கப்பட்டது. உங்களுடைய எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்” என நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை எழுதி பரிசளித்தேன்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here