Home செய்திகள் இந்தியா IPL ஸ்பொன்சர்ஷிப் போட்டிப் போடும் முன்னணி நிறுவனங்கள்…

IPL ஸ்பொன்சர்ஷிப் போட்டிப் போடும் முன்னணி நிறுவனங்கள்…

326
0
Share

IPL கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவில்லை. கொரோனா தாக்கம் காரணமாகச் செப்டம்பர் மாதம் 19 முதல் நவம்பர் 10 வரை UAE நாட்டில் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒவ்வொரு ஆண்டும் VIVO மொபைல் நிறுவனம் தான் ஐபிஎல் க்கு ஸ்பான்சர்ஷிப் ஆக இருப்பர் ஆனால் இந்த நிறுவனம் சீனாவுடன் தொடர்புடையது என்பதற்காக அதனை ரத்து செய்ததாக BCCI தெரிவித்தது.

இதன் பிறகு புதிய ஸ்பான்சர்க்காக அனைவரும் போட்டிப் போடுவதாகத் தகவல் கிடைத்தது. அதிலும் பைஜூஸ் நிறுவனம் 300 கோடி கொடுத்து ஸ்பான்சர்ஷிப் பெற முயற்சி செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஐபிஎல் ஸ்பான்சராக இருக்கிறது. இதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் இந்தியாவின் ஜியோ, கோகோ கோலா, அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியில் ஸ்பொன்செர்ஷிப் கிடைக்கப் போட்டிப் போடுவதாகத் தகவல் கசிந்துள்ளது. ஐபிஎல் நிர்வாகம் இது குறித்து எந்தவித முடிவையும் தெரிவிக்கவில்லை கூடிய விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here