Home ஆன்மீகம் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கேரள அரசு திட்டவட்டம் !

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கேரள அரசு திட்டவட்டம் !

503
0
Share

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. தற்போது மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனி மாத பூஜை மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார். தற்போது இந்த கொரோனா  காரணமாகப்  பக்தர்கள் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடைசியாக மாசி மாதம் நடைபெற்ற பூஜைக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு விசு என்று அழைக்கப்படும் சித்திரை மாத பூஜைக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது ஆனி மாத பூஜை நடைபெற உள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்களை அனுமதிப்பது பெரும் நோய் பரவலுக்குக் காரணமாகும் என்பதால் திருவிழாவை மாற்றி வைக்க வேண்டும் என்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தேவசம்போர்டுக்கு மனு அனுப்பினார். எனவே அனைத்து முன்பதிவும் நிறுத்தப்பட்டிருந்தது.

ஜூன் 3 வரை திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் ரத்தா ? தேவஸ்தான தரப்பில் விளக்கம்…

அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினையை ஆலோசிக்க நேற்று அவசர கூட்டம் கூட்டப்பட்டு அமைச்சர் கடகம்பள்ளி தலைமையில் நடைபெற்றது. மேலும் தேவசம் போர்டு தலைவர் வாசு தந்திரி மற்றும் சில முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்பு அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களைக் கோவிலுக்கு அனுமதிப்பது உகந்ததாக இருக்காது. எனவே இந்த கொரோனா ஊரடங்கில் அனைத்து சடங்குகளும் பூஜைகளும் குறிப்பிட்ட நாட்களில்  நடைபெற்றது.
devasam ministerஅதே போல் இந்த திருவிழா, சடங்குகளும் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .எனவே இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள இயலாது என்று கூறினார். இதற்கு ஒரு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் மதுக்கடைகளைத் திறந்த அரசு கோயில்களை ஏன் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு உத்தரவின்படி கோவில் நடை திறக்க அரசு முடிவு செய்தது.
ஆனால் வெளி மாநில பக்தர்கள் அதிகம் வர நேரிடும் என்பதால் சிக்கல் ஏற்படக்கூடாது. என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here