Home செய்திகள் இந்தியா ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் சிறப்பு திட்டங்கள் 399 ரூபாய் முதல் 1,499 வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் சிறப்பு திட்டங்கள் 399 ரூபாய் முதல் 1,499 வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

457
0
Share

JIO போஸ்ட்பெய்டு பிளஸ் சிறப்பு திட்டங்கள் 399 ரூபாய் முதல் 1,499 வரை ரீசார்ஜ் செய்து நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் ஏராளமான OTT சப்ஸ்க்ரிப்ஷனை அளிக்கிறது.

ரிலையன்ஸ் JIO நிறுவனம், 2019 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏஜிஎம்மில் அறிவித்ததன் அடிப்படையில், JIO போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டங்களை தொடங்கியது. இந்த புதிய JIO போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் வெறும் ரூ.399 முதல் தொடங்குகி 1500 வரை உள்ளது, மேலும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றிலிருந்து இலவச OTT சந்தாக்களை தருகின்றது. மேலும் இது சர்வதேச பயணங்களுக்கான விமான நெட்வொர்க் இணைப்பையும் அளிக்கிறது.

Jio Postpaid plus திட்டத்தின் மூலம் மொத்தம் ஐந்து திட்டங்கள் உள்ளது. ரூ.399 முதல் தொடங்கி ரூ.1,499 வரை உள்ளது. JIO போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களின் முக்கியமான சிறப்புகள் என்னவென்றால், டேட்டா ரோல் ஓவர் எனும் சிறப்பு வசதி, பேமிலி ஷேரிங் மற்றும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் தரப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து திட்டங்களில் ஒரு திட்டமான, ரூ.999 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தில், 200 GB அளவிலான ஒரு மாத டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் ரீச்சார்ஜ்களுக்கும் 500 GB வரை டேட்டா ரோல் ஓவர் ஆப்ஷன், பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக மூன்று சிம் கார்டு போன்ற சலுகையாக வழங்குகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here