Home செய்திகள் இந்தியா விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்களை அறிமுகம்! வெப் வாட்ஸ்அப் லேட்டஸ்ட் அப்டேட்…

விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்களை அறிமுகம்! வெப் வாட்ஸ்அப் லேட்டஸ்ட் அப்டேட்…

794
0
whats app
Share

வாட்ஸ்அப் வெப்பில் விரைவில் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் போன்ற வசதிகளை அறிமுகம் செய்யப்படும் என்று செய்திகள் பரவலாக வெளிவருகின்றது.

வாட்ஸ்அப் தற்போது மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற ஆப்களில் முதன்மையாக விளங்குகிறது. அந்த வகையில் இணையதள வாயிலாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெப்பும் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால் வாட்ஸ்அப் வெப்பில் வீடியோ கால் போன்ற அம்சங்கள் வேண்டும் என்று நீண்ட நாட்களாக பயனர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை குறிக்கிறதுள்ளது.

வங்கியில் பணம் செலுத்த கட்டணம்… பொதுமக்கள் அதிர்ச்சி!

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் ப்ளாட்பார்ம் தான் வாட்ஸ்அப். இந்நிலையில் விரைவில் வாட்ஸ்அப் வெப் செயலியில், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் அம்சங்களை பெற உள்ளது. வாட்ஸ்அப் வெப்பின் பதிப்பு 2.2043.7 இல் வெப் சமீபத்திய புதுப்பிப்பில் இந்த அம்சம் வர உள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது. WABetaInfo இன் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கும்.

மேலும், இந்த அம்சம் டேவலப்மேன்ட் பீட்டா கட்டத்தில் இருந்தாலும், அடுத்த சில வாரங்களில் புதிய அம்சத்தை வழங்க வாட்ஸ்அப் பரிசீலித்து வருகிறது என்று அறிக்கை கூறியுள்ளது. புதிய அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட்களையும் இந்த அறிக்கை வெளியிடுகிறது. இது ஒரு பயனர் அழைப்பைப் பெறும்போது ஒரு விண்டோ பாப்-அப் செய்யும் என்பதை காட்டுகிறது.

உள்வரும் அழைப்பை ஏற்க, நிராகரிக்க அல்லது புறக்கணிக்கும் விருப்பங்களுடன் விண்டோ ஒரு சிறிய “இன்கமிங் கால்” விண்டோவாக இருக்கும். இன்கமிங் கால் விண்டோ அழைப்பாளரின் காட்சி படத்தையும் காண்பிக்கும். அவுட்கோயிங் கால்களுக்கு, பாப்-அப் விண்டோ சிறிய மற்றும் அழைப்பின் நிலையை மட்டுமே இது காட்டும் மேலும் ‘கால்’, ‘ரிங்கிங்’ அல்லது கால் நேரத்தையும் இது காட்டும்.

WABetaInfor அறிக்கையில் புதுப்பிப்பு பற்றி குருப் காலிங் அம்சங்களையும் வாட்ஸ்அப் வெப்புக்குள் கொண்டு வரும் என்று கூறியுள்ளது. வாட்ஸ்அப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான ஆதரவு உலகெங்கிலும் உள்ள பயனர்களிடமிருந்து மிகவும் கோரப்பட்ட அம்சமாகும். இப்போதைக்கு, வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் இந்த அம்சத்தைப் பற்றிய எந்த விவரங்களையும் பகிரவில்லை.மேலும் இது பற்றிய செய்தியை நிறுவனம் எப்போது வெளியிடும் என்று தெரியாது. ஆனால் ஆப்ஸ் சப்போர்ட் மற்றும் சாட்களை எப்போதும் முடக்குவதற்கான திறன் போன்ற புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சமீபத்தில் சோதித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் உண்மை என்று நம்பப்பட்டால், வாட்ஸ்அப் பயனர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதையும், கடந்த காலங்களில் அதிக பேரால் கோரப்பட்ட அம்சங்களை பற்றி யோசிப்பதும் அவசியமாகும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here