Home செய்திகள் இந்தியா சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்ட சந்திராயன்-2 ரோவர் கருவி பற்றி தகவல் ! சென்னை இன்ஜினியர் தகவல்..

சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்ட சந்திராயன்-2 ரோவர் கருவி பற்றி தகவல் ! சென்னை இன்ஜினியர் தகவல்..

372
0
Share

நிலவை ஆய்வு செய்வதற்காக பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்கலத்தையும் ஏராளமான கருவிகளையும் விண்ணிற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்வர். அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி அதில் விக்ரம் லேண்டர் எனும் ஒரு கருவியையும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த விண்கலம் தரையிறங்கியதும் அதிலிருந்து ரோவர் வெளிவந்து ஆராய்ச்சி செய்து தகவல் அனுப்பும் படி எண்ணியிருந்தனர். ஆனால் அங்கிருந்த ரோவர் சரியான முறையில் தரை இறங்காததால். விண்கலத்திற்கு இடையே தொடர்பு துண்டித்தது. அதைத் தொடர்ந்து அந்த முயற்சி பெரும் தோல்வியைத் தழுவியது.

இது தொடர்பாக ரோவர் கண்டறியும் முயற்சியில் நாசாவும், இஸ்ரோவும் ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டன. சென்னையைச் சேர்ந்த ஒரு மென்பொறியாளர் சண்முகசுந்தரம் என்பவர் நாசா வெளியிட்ட புகைப்படத்தில் இருந்து விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை குறித்து தகவல் இஸ்ரோவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு தகவல் தெரிவித்தார். தற்போது மீண்டும் ரோவர் இயந்திரம் செயல்பட்டதாகவும், அது இருக்கும் இடத்தை இவர் கண்டறிந்து உள்ளதாகவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது : நிலவுக்கு அனுப்பிய விண்கலத்திலிருந்து ரோவர் சேதமடையாமல் உறுதியாக உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர் நிலவின் மேற்பரப்பிலிருந்து 2 மீட்டர் ஆழத்தில் இந்த லேண்டர் கருவி விழுந்திருக்கலாம் என்றும், அவர் கருவி அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் இருப்பதாகவும் விக்ரம் லேண்டர் சற்று கடுமையான வேகத்தில் லேண்டரை இருக்கக்கூடும். இதனால் தகவல் தொடர்பு கொண்டு இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மின்னஞ்சல் வாயிலாக இஸ்ரோவிடம் தகவல் பரிமாறியுள்ளார். ஆனால் நாசா இடம் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் சண்முக சுப்பிரமணியன் கொடுத்துள்ள தகவல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

தற்போது எந்த தகவல் குறித்து ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியம் இவர் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். பிரக்யான் ரோவர் தானாக நகர்ந்திருந்தால் அதுவே ஒருவகையான வெற்றியைத் தான் என்றும், சந்திராயன் 3 தயாரிப்பிற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here